குளிர்ச்சி தரும் காலணிகள்
காலுக்கு குளிர்ச்சி தரும் புதுமை காலணிகளை உருவாக்கி உள்ளது இத்தாலிய ஷூ வடிவமைப்பு நிறுவனம்.
உலகின் மிகக் கடினமான பொருள் என்று வர்ணிக்கப்படும் கிராபீன் மூலக்கூறுகளைக் கொண்டு காலுக்கு குளிர்ச்சி தரும் புதுமை காலணிகளை உருவாக்கி உள்ளது இத்தாலிய ஷூ வடிவமைப்பு நிறுவனமான ஐ.டி.டி. இந்த காலணிகள் நமது கால்களில் உள்ள வெப்பத்தை வெகுவாக கிரகித்துக் கொள்கிறது. 50 சதவீத வெப்பத்தை உறிஞ்சிவிடுவதால் குளிர்ச்சியை உணரலாம் என்று உரிமை கோரியிருக்கிறது ஐ.டி.டி. நிறுவனம். இந்த நவீன காலணிகள், மிலன் நகரில் நடந்த காலணி கண்காட்சியில் இடம் பெற்றது. பெடல் நிறுவனம் இந்த மாதிரியில் காலணிகளை தயாரித்து வழங்குவதற்கான காப்புரிமம் பெற்றுள்ளது. விரைவில் அவை சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
Related Tags :
Next Story