ஆனைமலை பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு வழங்க கோரி சப்–கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
ஆனைமலை பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு வழங்க கோரி சப்–கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதற்கு சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். முகாமில், ம.தி.மு.க.மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சேதுபதி கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
குப்பாள் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவருக்கு நத்தம் புறம்போக்கு நிலம் 0.77 ஏக்கர் அரசால் வழங்கப்பட்டுள்ளது.இதனை ஒருவர் தன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.தற்போது பெரிய போது கிராமத்திற்கு அரசு உயர்நிலைப் பள்ளி ஒதுக்கீடு கிடைத்துள்ளது. போதிய இடவசதி இல்லாத காரணத்தால் பள்ளிக்கான கட்டிட பணிகள் ஆரம்பிக்கப்படாமல் உள்ளன. எனவே தாங்கள் இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு அங்கு உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனைமலைப்பகுதி பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
ஆனைமலைப்பகுதியில் பல ஆண்டுகளாக உள்ள வீடுகளுக்கு புதியதாக குடிநீர் இணைப்பு உள்ளாட்சி நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை.இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது கடும் வறட்சி காரணமாக புதியதாக இணைப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்தனர். தற்போது ஆனைமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் நல்ல மழை பெய்து உள்ளது. ஆறு, குளத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆழியார் அணையிலும் தண்ணீர் நல்ல முறையில் உள்ளது. எனவே தற்போது தண்ணீர் பஞ்சம் இல்லை. எனவே வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி 26–வது வார்டு கண்ணப்பன் நகர் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:–
எங்கள் பகுதியில் குப்பை தொட்டிகள், சாக்கடை வசதி மற்றும் தார் ரோடு வசதி இல்லை. காலியிடங்களில் குப்பை கொட்ட நேரிடுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு பலர் காய்ச்சல் வந்து பாதிக்கப்படுகின்றனர்.குப்பைகளை முறையாக அகற்ற குப்பை வண்டிகளும் வருவதில்லை. இது குறித்து நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தோம். இதையடுத்து அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து குப்பை வண்டி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து விட்டனர்.
பாதாள சாக்கடை அமைப்பதற்கு மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. இருப்பினும் உரிய முறையில் வரி செலுத்தி வருகிறோம். அருகில் உள்ள சின்னசாமி லே–அவுட்டில் வீட்டு வரி குறைவாக போடப்பட்டுள்ளது. கண்ணப்பன் நகரில் 17 வீடுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே தாங்கள் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், அதிக வரியை சீரமைத்து தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story