விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Nov 2017 4:00 AM IST (Updated: 14 Nov 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைவருக்கும் வழக்கம்போல் வேலை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்யக் கூடாது என்று வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார்.

மாநில கருத்தியல் பரப்பு செயலாளர் தமிழ்குட்டி, ஒன்றிய செயலாளர்கள் சங்க தமிழன், தமிழ் வளவன், நகர செயலாளர்கள் உதயா, அல் அமீன், சமூக நல்லிணக்க பேரவை அமைப்பாளர் தமிழ்பரிதி, யாசர் அராபத், விடுதலை செழியன், சிவா, அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து ஊர்வலமாக திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகம், யூனியன் அலுவலகத்துக்கு சென்று, கோரிக்கை மனு வழங்கினர். 

Next Story