தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்
பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி ஆக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
செம்பனார்கோவில்,
செம்பனார்கோவில் அருகே காலமநல்லூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 7 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜெனார்த்தனம் தலைமை தாங்கினார். இதில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராசைய்யன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பயிர்க்காப்பீட்டு தொகை
போராட்டத்தின்போது, காலமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு உடனே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலித்தீர்த்தான், செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகரத்தினம், தரங்கம்பாடி துணை தாசில்தார் ராஜரத்தினம், வருவாய் ஆய்வாளர் சுந்தர், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் மேற்கண்ட பகுதிக்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story