மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் முதியவரின் உடலை வயலில் இறங்கி எடுத்து சென்ற அவலம்
கொள்ளிடம் அருகே மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் முதியவரின் உடலை அடக்கம் செய்ய வயலில் இறங்கி எடுத்து சென்றனர். சாலை வசதி செய்து தராவிட்டால் தேர்தல்களை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பன்னீர்கோட்டகம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் மயானம் உள்ளது. இங்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அங்குள்ள வயலில் இறங்கி தான் மயானத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும், வயலில் நெற்பயிர் சாகுபடி செய்து இருந்தால் நெற்பயிர்களை சேதப்படுத்தி இறந்தவர்களின் உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். மழைகாலத்தில் வயலில் தண்ணீர் தேங்கி நின்றாலும் அதில் இறங்கிதான் மயானத்துக்கு செல்ல வேண்டிய அவலநிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பன்னீர்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த ராஜலிங்கம் (வயது88) என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவர் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். அவரது உடலை உறவினர்களும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் அங்குள்ள வயலில் இறங்கி எடுத்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து பன்னீர்கோட்டகம் கிராம மக்கள் கூறியதாவது:
பன்னீர்கோட்டகம் கிராமத்தில் இருந்து மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதற்குள் மிகுந்த சிரமப்படுகிறோம். மேலும், மழைக்காலத்தின்போது சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டத்தை அனுபவிக்கிறோம். மயானத்துக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் மக்கள் பிரதிநிதிகள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அரசு அதிகாரிகளும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை அமைக்க தவறினால் இந்த கிராமத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும், இனிவரும் தேர்தல்களை புறக்கணிக்கவும், ரேஷன் கார்டுகள் மற்றும் வாக்காளர் அட்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story