நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்தது; புதுமாப்பிள்ளை பலி


நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்தது; புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 14 Nov 2017 4:30 AM IST (Updated: 14 Nov 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

நித்திரவிளை,

கேரள மாநிலம் பாறசாலை அருகே செங்கவிளை அம்புலிக்கோணத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது26), பெயிண்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி ஆதிரா. இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது.

இந்தநிலையில், பிரதீப் குமார் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் நித்திரவிளை அருகே சமத்துவபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு உறவினரை பார்த்த பின்பு மீண்டும் அவர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

நித்திரவிளை அருகே கீழ கிராத்தூர் புளிச்சிவிளை பகுதியில் சென்ற போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதில் பிரதீப் குமாருக்கு படுகாயம் ஏற்பட்டது.

அவரை பொதுமக்கள் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில்  சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீப் குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story