இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் வலியுறுத்தல்


இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Nov 2017 4:17 AM IST (Updated: 14 Nov 2017 4:16 AM IST)
t-max-icont-min-icon

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி ஜவகர்நகர் மற்றும் எழில்நகர் பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இந்திய குடியரசு கட்சி சார்பில், அதன்

சோழிங்கநல்லூர்,

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி ஜவகர்நகர் மற்றும் எழில்நகர் பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இந்திய குடியரசு கட்சி சார்பில், அதன் மாநில தலைவர் செ.கு.தமிழரசன், மழையால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த 200 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் செ.கு.தமிழரசன் கூறும்போது, ‘‘சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு உடனடியாக குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

அவருடன் மாநில துணைத்தலைவர் முருகன், மாவட்ட தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story