சேலத்தில் பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி நாளை நடக்கிறது
கூட்டுறவு வாரவிழாவையொட்டி சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நாளை நடக்கிறது.
சேலம்,
அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கூட்டுறவு இயக்கத்தின் நடவடிக்கை, சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் கூட்டுறவு வாரவிழா நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 64-வது கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே கூட்டுறவு இயக்கம் தொடர்பான தலைப்புகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் சேலம் அம்மாபேட்டை காமராஜர் காலனியில் உள்ள நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நாளை (புதன்கிழமை) நடத்தப்படுகிறது.
இதில் கூட்டுறவும்- நுகர்வோரும், சமுதாய முன்னேற்றத்தில் கூட்டுறவின் பங்கு, உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவு, வறுமை ஒழிப்பில் கூட்டுறவு, கூட்டுறவும்-தலைமை பண்பும் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடக்கிறது.
இதேபோல், நவீன இந்தியாவை உருவாக்குவதில் கூட்டுறவின் பங்கு, கிராமிய பொருளாதாரத்தில் கூட்டுறவின் பங்கு, விவசாயிகளின் நலனில் கூட்டுறவு பங்கு, கூட்டுறவு தத்துவம் மற்றும் முதலாளித்துவம், கூட்டுறவும்-இளையதலைமுறையும் என்ற தலைப்புகளில் கட்டுரைப்போட்டியும், அன்றாட வாழ்வில் கூட்டுறவின் பங்கு என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும் நடத்தப்படுகிறது.
இந்த போட்டிகளில் பள்ளி, கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
இதில், முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 19-ந் தேதி சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நடைபெற உள்ள விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பரிசு வழங்குகிறார்.
இந்த தகவலை கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story