கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜ் (வயது 40). விவசாயி. இவருடைய மனைவி கலைச்செல்வி (35), மகள் சர்மிளா (11), மகன்கள் கார்த்தி (9), அரவிந்தன் (4). நேற்று கலைச்செல்வி தனது குழந்தைகளுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக வந்தார். அப்போது கலைச்செல்வி தனது மகள் சர்மிளா, மகன்கள் கார்த்தி, அரவிந்தன் ஆகியோருடன் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து கலைச்செல்வி பையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை பிடிங்கினர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கலைச்செல்வி கூறியதாவது:- கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 2 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். அதில் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வருகிறோம். ஆனால் விவசாய நிலத்தில் பயிர் செய்யவிடாமல், அந்த நிலத்தை விற்பனை செய்தவரின் உறவினர்கள் சிலர் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக கெங்கவல்லி போலீஸ் நிலையம், ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஒரு தரப்பினருக்கு சாதகமாக போலீசார் நடந்து கொள்கிறார்கள். நேற்று விவசாய நிலத்தில் முள்ளுச்செடியை வெட்டி போட்டு விட்டனர். இதனால் விவசாயம் செய்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதைக்கேட்ட போலீசார் நீங்கள் கலெக்டரிடம் மனு கொடுங்கள், அவர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார் என கூறினர். இதன்பின்னர் கலைச்செல்வி கலெக்டர் ரோகிணியிடம் புகார் மனு கொடுத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story