வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை


வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 14 Nov 2017 5:47 AM IST (Updated: 14 Nov 2017 5:47 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

அடுக்கம்பாறை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீரக தொற்று மற்றும் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு ஒவ்வொரு மாதமும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பேரறிவாளன் 2 மாதம் பரோலில் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. பரோல் முடிந்து கடந்த மாதம் 24–ந் தேதி மீண்டும் பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்க நேற்று காலை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் பலத்த போலீஸ் காவலுடன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு சிறுநீர், ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மூட்டு வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் பேரறிவாளனை போலீசார் அழைத்து சென்று மீண்டும் சிறையில் அடைத்தனர்.


Next Story