பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்


பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Nov 2017 12:22 AM GMT (Updated: 2017-11-14T05:51:57+05:30)

காட்பாடி பிரம்மபுரம் பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் 300–க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் உள்ள பாலாற்றில் கடந்த பல ஆண்டுகளாக மணல் கொள்ளை அதிகமாக காணப்படுகிறது. மாட்டு வண்டிகளில் மணலை கொள்ளையடித்து அங்கிருந்து ஒதுக்குப்புறமான இடத்தில் அதை கொட்டி அங்கிருந்து லாரிகளில் மணல் ஏற்றி செல்கின்றனர். மேலும் மணல் கடத்தலுக்கு பொக்லைன், டிராக்டர்களை பயன்படுத்துகின்றனர். இரவில் தான் அதிகமாக மணல் கொள்ளை நடக்கிறது. இதனால் பாலாற்றில் பல இடங்களில் பள்ளங்கள் காணப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. கிடைக்கும் நிலத்தடி நீரும் உப்புநீராக உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story