தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே நாளில் அதிக சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே நாளில் அதிக சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்து உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே நாளில் அதிக சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்து உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
புதிய சாதனை
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அதிக அளவில் நிலக்கரி, உரம், உரத்துக்கான மூலப்பொருட்கள் மற்றும் இதர சரக்குகள் கையாளப்பட்டு வருகிறது. இங்கு கடந்த 11–ந் தேதி ஒரே நாளில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 189 மெட்ரிக் டன் சரக்குகள் கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு 1 லட்சத்து 61 ஆயிரத்து 935 டன் சரக்கு கையாளப்பட்டு இருந்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டு உள்ளது.
பாராட்டு
இந்த சாதனை படைக்க உறுதுணையாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், துறைமுக ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் இது போன்று தொடர்ந்து பல சாதனைகள் புரிய வேண்டும்.
இவ்வாறு வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.