குளத்தில் மண் அள்ளியதை செல்போனில் படம் பிடித்த வாலிபர் மீது தாக்குதல் 5 பேர் மீது வழக்கு
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சிந்தலப்பட்டியில் உள்ள குளத்தில், சிலர் லாரியில் மண் அள்ளினர். அதனை, அந்த ஊரை சேர்ந்த முருகானந்தம் செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
ஒட்டன்சத்திரம்,
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சிந்தலப்பட்டியில் உள்ள குளத்தில், சிலர் லாரியில் மண் அள்ளினர். அதனை, அந்த ஊரை சேர்ந்த முருகானந்தம் (வயது 29) தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அதே ஊரை சேர்ந்த சண்முகவேல், மனோஜ்குமார், செல்வக்குமார், குணசேகரன், பாலமரத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திகைவேல் ஆகிய 5 பேர் முருகானந்தத்தை தாக்கியதாக தெரிகிறது.
இதுபற்றி அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் முருகானந்தம் புகார் செய்தார். அதன்பேரில் 5 பேர் மீதும் அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story