விவசாயி அடித்துக்கொலை சேலம் கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
பெத்தநாயக்கன்பாளையத்தில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி விவசாயியின் உறவினர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம்,
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி படுவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 60). விவசாயி. இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய நிலத்தை பச்சமுத்து விலைக்கு வாங்கி அதில் விவசாயம் செய்து கொண்டிருந்தார். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் இறந்து விட்டார்.
இதன்பின்னர் அந்த நிலத்தில் தனக்கு பங்கு இருப்பதாகவும், எனவே அதற்கான தொகையை தரும்படியும் கிருஷ்ணனின் அண்ணன் ராமசாமி அடிக்கடி பச்சமுத்துவை சந்தித்து கேட்டு வந்தார். இதேபோல் நேற்று முன்தினமும் பச்சமுத்துவிடம் அவர் பணம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராமசாமி மற்றும் சிலர் கட்டையால் பச்சமுத்துவை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பச்சமுத்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக ராமசாமியை போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட பச்சமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நேற்று காலை அவருடைய உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பச்சமுத்துவின் உறவினர்கள் கூறுகையில், பச்சமுத்து கொலை செய்யப்பட்டதை சிலர் நேரில் பார்த்து உள்ளனர். அவர்களிடம் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என கொலையாளிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். பச்சமுத்து கொலையில் தொடர்புடைய 8 பேரை கைது செய்ய வேண்டும், என்றனர்.
இதைக்கேட்ட போலீசார், விசாரணையின் அடிப்படையில் பச்சமுத்து கொலையில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள், என்றனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story