டெங்கு கொசு ஒழிப்பு பணி: ஆலங்காயம் ஒன்றியத்தில் வீடு, வீடாக கலெக்டர் ஆய்வு
ஆலங்காயம் ஒன்றியத் தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி குறித்து வீடு, வீடாக சென்று கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி,
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு மற்றும் சுகாதார பணிகளை கலெக்டர் ராமன் நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள செட்டி யப்பனூர் ஊராட்சிக்குட் பட்ட பகுதிகளில் கலெக்டர் ராமன் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது அவர் வீடு, வீடாக சென்று சுகாதாரம் மேற்கொள்வது குறித்தும், தூய்மைபடுத்தும் பணி குறித்து விளக்கியும், தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்கும்படியும் பொதுமக்களிடம் கூறினார்.
நீர்த்தேக்க தொட்டி
அதைத்தொடர்ந்து ஊராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட் டார். பின்னர் அரசு வேளாண்மை கிடங்கு உள்ள பகுதியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட திட்ட அலுவலர் பெரியசாமி, ஒன்றிய ஆணையாளர்கள் எஸ்.வசந்தி, ரமேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிரகாசம், ஒன்றிய பொறியாளர் அரசு மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உடன் இருந்தனர்.
முன்னதாக வாணியம்பாடி நகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து நகராட்சி ஆணையாளர் கோபுவிடம் கலெக்டர் ராமன் கேட்டறிந்தார்.

Related Tags :
Next Story