பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்


பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 16 Nov 2017 2:15 AM IST (Updated: 15 Nov 2017 7:58 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில், உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில், உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன் கொடி அசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஆதித்தனார் கல்வி நிறுவனத்தில் இருந்து மாணவிகள் ஊர்வலமாக புறப்பட்டு மெயின் ரோடு, 4 ரத வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் ஆதித்தனார் கல்வி நிறுவனத்தை வந்தடைந்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, துணை முதல்வர் பிரியா மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், ஆதித்தனார் கல்வி நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story