கும்பகோணத்தில் 3 மணி நேரத்தில் 2½ லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து மாணவர்கள் உலக சாதனை
கும்பகோணத்தில் 3 மணி நேரத்தில் 2½ லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
கும்பகோணம்,
மரம் வளர்ப்பை ஊக்குவித்து பசுமையை பெருக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மாணவ- மாணவிகள் மூலம் மரங்களின் விதைகளை உரம் கலந்த களிமண்ணில் வைத்து பந்து வடிவில் தயாரித்து ஈரப்பதம் உள்ள பகுதிகளில் விதைக்கப்பட்டு வருகிறது. இதன்படி
கும்பகோணம் சரஸ்வதி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 3 மணி நேரத்தில் 2½ லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யதிருந்தது. அதன்படி நேற்று காலை தொடங்கிய இந்த விதைப்பந்து விழாவில் கும்பகோணத்தை சேர்ந்த 6 பள்ளிகளில் இருந்து 5,000 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார் விதைப்பந்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் 3 மணி நேரத்தில் 2½ லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. விழாவில் தாசில்தார் மாணிக்கராஜ், ஏசியன் ரெக்காட்ஸ் அகாடமி தீர்ப்பாளர் செந்தில்குமார், தென் இந்திய ரெக்காட்ஸ் அகாடமி மேலாளர் ஜெகநாதன், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மேலாளர் ராஜ்கிருஷ்ணா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
சான்றிதழ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் விதைப்பந்து விழா நடைபெற்றது. இதில் 5000 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விதைப்பந்துகளை தயாரித்து உள்ளனர். 3 மணி நேரத்தில் 2½ லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதற்கான சான்றிதழை தென்இந்திய ரெக்காட்ஸ் அகாடமி, தமிழ் புக்ஆப் ரெக்காட்ஸ், ஏசியன் ரெக்காட்ஸ் அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இந்த விதைப்பந்துகள் தயாரிப்பதற்காக உரம் கலந்த களிமண், 8 லட்சம் விதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பூவரசமரம், புங்கமரம், புளியமரம் உள்ளிட்ட 12 வகையான மரங்களின் விதைகள் இந்த விதைப்பந்தில் வைக்கப்பட்டுள்ளன. உரம் கலக்கப்பட்ட களிமண்ணில் விதை வைக்கப்பட்டுள்ளதால் அதன் மீது தண்ணீர் பட்டவுடன் மரம் வளர தொடங்கிவிடும். இந்த விதைப்பந்து விழாவில் பங்கேற்ற 5,000 மாணவ-மாணவிகளுக்கும் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.

Related Tags :
Next Story