அரசு பள்ளியில் ‘ஈவ்டீசிங்’ குறித்து மாணவிகள் தெரிவிக்க புகார் பெட்டிகள்
‘ஈவ்டீசிங்’ குறித்து மாணவிகள் புகார் தெரிவிக்க வசதியாக தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புகார் பெட்டிகளை தர்மபுரி டவுன் போலீசார் வைத்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளை கேலி, கிண்டல் செய்தல், பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தல், இளம் வயது திருமணம் ஆகிய செயல்களை தடுக்க காவல்துறை மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய செயல்பாடுகளால் பாதிப்பிற்குள்ளாகும் மாணவிகள் தங்கள் பிரச்சினை குறித்து போலீஸ் நிலையங்களுக்கு நேரில் சென்று புகார் அளிக்க தயங்கும் நிலை பரவலாக உள்ளது.
பள்ளி மாணவிகள் இத்தகைய பிரச்சினைகளை போலீசாருக்கு தெரிவிக்க வசதியாக தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புகார் பெட்டிகளை வைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி தலைமை தாங்கினார். டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி 2 புகார்பெட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியை தெரசாவிடம் வழங்கினார்.
இந்த புகார் பெட்டிகள் குறித்து போலீசார் கூறியதாவது:-
பள்ளி மாணவிகள் ‘ஈவ்டீசிங்’ பிரச்சினைகள் குறித்த விவரங்களை விளக்கி மனுக்களை எழுதி இந்த புகார் பெட்டியில் போடலாம். புகார் மனுக்களை எழுதும் மாணவிகள் தங்கள் பெயரை குறிப்பிட்டோ, குறிப்பிடாமலோ விவரங்களை தெரிவிக்கலாம். வாரத்திற்கு ஒரு முறை இந்த புகார்பெட்டியில் உள்ள புகார் மனுக்கள் எடுக்கப்பட்டு அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும். புகார் தெரிவித்த மாணவிகளின் பெயர் எந்த சூழலிலும் வெளியிடப்படாமல் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிகள் ஆய்வாளர் சீனிவாசன், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story