தகராறை தடுக்க சென்றபோது வெல்டிங் பட்டறை உரிமையாளர் குத்திக்கொலை 3 பேர் படுகாயம்
ஓசூரில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற வெல்டிங் பட்டறை உரிமையாளர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோவிந்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). இவரும், நல்லூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சவுமியா (20) என்பவரும், காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் ஓசூர் சின்ன எலசகிரி அனுமந்த் நகர் பகுதியில் வீடு எடுத்து தனியாக தங்கியிருந்தனர். இந்த நிலையில், சவுமியாவின் பெரியப்பா மகள்கள், அவரை பார்ப்பதற்காக அனுமந்த் நகருக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர்.
இதை கேள்விப்பட்ட உறவினர்களான நல்லூர் அக்ரஹாரத்தை சேர்ந்த வெங்கடேஷ், ராஜேஷ் ஆகியோர், அனுமந்த் நகரில் உள்ள சுரேஷ் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அவர்களது நண்பரான, அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் பணியாற்றி வரும், அம்பேத்கர் நகரை சேர்ந்த ஹரிஸ் (28) என்பவர், சுரேஷ் வீட்டின் அருகே சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில், ஹரிசிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை அறிந்து அங்கு சென்ற, ஹரிசின் பெரியப்பா மகன் மஞ்சுநாத் (25) என்பவரை முதுகு மற்றும் மார்பு பகுதியிலும், ஹரிசின் அண்ணன் நாகேஷ் (29) என்பவரை மார்பு பகுதியிலும், சுரேஷ் தரப்பினர் கத்தியால் குத்தினார்கள். அந்த நேரம் அனுமந்த் நகரில் வெல்டிங் பட்டறை வைத்துள்ள, சின்ன எலசகிரி சின்ன பழனியப்பா நகரை சேர்ந்த கமலக்கண்ணன் (25) என்பவர் சண்டையை தடுக்க சென்றார்.
இதில் அவரது இடது மார்பு பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த மஞ்சுநாத், பெங்களூரு தனியார் மருத்துவமனையிலும், நாகேஷ், ஓசூர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுரேஷ் மற்றும் கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story