ஜப்தி செய்யப்பட்ட 68 அரசு பஸ்களை மீட்க நாகர்கோவில் மண்டலத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
ஜப்தி செய்யப்பட்ட 68 அரசு பஸ்களை மீட்க நாகர்கோவில் மண்டலத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி தெரிவித்தார்.
நாகர்கோவில்,
விபத்து வழக்குகள் மற்றும் கோர்ட்டு உத்தரவிட்டும் இழப்பீட்டுத்தொகை வழங்காத வழக்குகள் போன்றவை தொடர்பாக தமிழகம் முழுவதும் ஏராளமான அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் அந்த பஸ்களை இயக்க முடியாத நிலையில் கோர்ட்டுகள் மற்றும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்களை மீட்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலத்துக்கு, ஜப்தி செய்யப்பட்ட பஸ்களை மீட்கவும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
ரூ.5 கோடி
தமிழகம் முழுவதும் கோர்ட்டு நடவடிக்கையின் மூலம் ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்களை மீட்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் நாகர்கோவில் மண்டலத்திற்குட்பட்ட ஜப்தி செய்யப்பட்ட 68 பஸ்களை மீட்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்தவர்கள், அவர்களுடைய வக்கீல்களிடம் இழப்பீட்டுத்தொகையை குறைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணவும், பஸ்களை மீட்கவும் உயர் அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி நாகர்கோவில் மண்டலத்துக்கு உட்பட்ட ஜப்தி செய்யப்பட்ட பஸ்களை மீட்டு வருகிறோம். கடந்த வாரத்தில் 18 பஸ்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் நாகர்கோவில் கோர்ட்டில் 4 பஸ்களுக்கும், வள்ளியூர் கோர்ட்டில் ஒரு பஸ்சுக்கும், திருநெல்வேலி கோர்ட்டில் ஒரு பஸ்சுக்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பஸ்கள் விரைவில் மீட்கப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Related Tags :
Next Story