மார்த்தாண்டம் அருகே மீன் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது; 2 பேர் காயம்


மார்த்தாண்டம் அருகே மீன் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது;  2 பேர் காயம்
x
தினத்தந்தி 16 Nov 2017 3:45 AM IST (Updated: 16 Nov 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே மீன் ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து 2 பேர் காயமடைந்தனர்.

குழித்துறை,

குளச்சலில் இருந்து ஒரு லாரி மீன் ஏற்றிக்கொண்டு நேற்று காலை திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டு சென்றது. அதை திருவனந்தபுரம் பாலராமபுரத்தை சேர்ந்த அனூப் (வயது32) என்பவர் ஓட்டி சென்றார். அந்த லாரி மார்த்தாண்டம் அருகே நட்டாலம் வலியக்கண்டரை பகுதியில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால், லாரி நிறுத்துவதற்காக டிரைவர் பிரேக் போட்டார். இதில் லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

போலீஸ் விசாரணை

இந்த விபத்தில், லாரி டிரைவர் அனூப் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும், அவருடன் இருந்த கிளீனருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கிளீனர் திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மார்த்தாண்டத்தில் மேம்பாலம் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் நட்டாலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், லாரி கவிழ்ந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story