அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வார்டு கட்டுமான பணி தீவிரம்


அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வார்டு கட்டுமான பணி தீவிரம்
x
தினத்தந்தி 16 Nov 2017 4:00 AM IST (Updated: 16 Nov 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வார்டு கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கரூர்,

கரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சைக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிறந்த குழந்தைகளுக்கு குறைபாடுகள் இருந்தால் அதற்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வசதிகள் தற்போது வெவ்வேறு கட்டிடத்தில் உள்ளது. இதற்கு ஒரே கட்டிடமாக கட்ட அரசு நிதி ஒதுக்கியது. இதையடுத்து மருத்துவமனை நுழைவு வாயில் அருகே குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வார்டு கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்த பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தரைத்தளம், முதல் தளம், 2-வது தளம் மற்றும் மேல் தளத்துடன் கட்டப்பட்டு வருகிறது.

பணிகள் விரைவில் முடியும்

இந்த பணிகள் குறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், “குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வார்டு ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி, செவித்திறன், கை, கால் உள்ளிட்டவற்றில் குறைபாடுகளுடன் பிறந்தால் அதற்கு ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் கட்டிடம் கட்டப் படுகிறது.

தரைத்தளத்தில் 4 அறைகளும், முதல் தளத்தில் 3 அறைகளும், சிறிய வளாகமும், 2-வது தளத்தில் 2 அறைகளும், வளாகமும் கட்டப்படுகிறது. இதில் பெருமளவு பணிகள் முடிந்து விட்டன. கட்டுமான பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். தற்போது மருத்துவமனையின் உள்ளே குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பணிகள் முடிவடைந்ததும் புதிய கட்டிடத்தில் சிகிச்சை தொடங்கப்படும்” என்றனர். 

Next Story