பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குளித்தலை,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குளித்தலை தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கரூர் மாவட்ட பொருளாளர் தங்கராசு தலைமை தாங்கினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்து நிபந்தனையின்றி புதிய கடன்கள் வழங்கவேண்டும்.
ஆக்கிரமிப்புகள்
குளித்தலை சுங்கவாயில் முதல் பெரியபாலம் வரைசாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றவேண்டும். குளித்தலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கூடுதல் அலுவலர்களை நியமிக்கவேண்டும், சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story