டாஸ்மாக்கடை திறந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
அறந்தாங்கி அருகே சுனையக்காடு பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி,
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக்கடைகளை மூடவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து குரும்பூர் ஒத்தக்கடையில் இருந்த டாஸ்மாக் கடை சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதையடுத்து குரும்பூர் ஒத்தக்கடை அருகே உள்ள சுனையக்காடு பகுதியில் மீண்டும் டாஸ்மாக்கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த கடையை திறக்கக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சுனையக்காடு பகுதியில் டாஸ்மாக்கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுனையக்காடு, பரவாக்கோட்டை, கும்மலாங்குண்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் சுனையக்காடு பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக்கடை திறக்கப்பட்டதை கண்டித்தும், உடனே கடையை மூட வலியுறுத்தியும், சுனையக்காடு கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா. இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story