பெயிண்டர் கொலையில் பேப்பர் பொறுக்கும் தொழிலாளி கைது


பெயிண்டர் கொலையில் பேப்பர் பொறுக்கும் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 16 Nov 2017 4:30 AM IST (Updated: 16 Nov 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் பெயிண்டர் கொலையில் பேப்பர் பொறுக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். பணம் கேட்டு தகராறு செய்ததால் கொலை செய்ததாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை வாணரப்பேட்டை சித்தானந்தா கோவில் வீதியை சேர்ந்தவர் வேலு என்ற முனிவேலு (வயது 32). பெயிண்டர். இவர் கடந்த அக்டோபர் மாதம் 3–ந் தேதி ஆட்டுப்பட்டியில் உள்ள சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடித்தார். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது வேலுவின் நண்பரான சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த பேப்பர் பொறுக்கும் தொழிலாளி வெங்கடேசன் என்ற அவதார்(38) என்பவர் வேலுவை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் தேட்பட்டு வந்த வெங்கடேசன் நேற்றுக் காலை ஆட்டுப்பட்டி சாராயக்கடைக்கு சாராயம் குடிக்க சென்றார். இது பற்றிய தகவல் அறிந்தவுடன் உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று வெங்கடேசனை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலம் வருமாறு:–

நான் புதுவையில் தங்கி பேப்பர் பொறுக்கும் தொழில் செய்து வந்தேன். நான் ஆட்டுப்பட்டி சாராயக்கடைக்கு சாராயம் குடிக்க செல்லும் போது எனக்கும் வேலு என்ற முனுசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அன்று நாங்கள் இருவரும் சாராயம் குடித்தோம். அப்போது குடிபோதையில் இருந்த என்னிடம் வேலு பணம் கேட்டார். நான் இல்லை என்று கூறினேன். அவர் என்னிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த நான் கத்தியால் வெட்டினேன். அவர் இறந்துவிட்டார். பின்னர் நான் தப்பி சென்று விட்டேன். இந்த நிலையில் ஒரு மாதம் நான் சென்னையில் தலைமறைவாக இருந்து வந்தேன். தற்போது புதுவை வந்த என்னை போலீசார் கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story