மும்பையில் பழம்பெரும் நடிகை சியாமா மரணம்
பழம்பெரும் இந்தி நடிகை சியாமா உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
மும்பை,
பழம்பெரும் இந்தி நடிகை சியாமா மும்பையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. இதைத்தொடர்ந்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திரையுலக பிரமுகர்கள் ஏராளமானோர் நடிகை சியாமாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மெரின்லைன் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
நடிகை சியாமா 1950–களில் திரையுலகை கலக்கியவர். அக்கால இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த அவர், அப்போதைய சூப்பர் ஸ்டார் ஷம்மிகபூருடன் இணைந்து நடித்திருக்கிறார். அவரது கணவர் பாலி மிஸ்திரி, திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர்.
Related Tags :
Next Story