மழையால் துண்டிக்கப்பட்ட ஒரத்தூர்–நீலமங்கலம் சாலை சீரமைப்பு


மழையால் துண்டிக்கப்பட்ட ஒரத்தூர்–நீலமங்கலம் சாலை சீரமைப்பு
x
தினத்தந்தி 16 Nov 2017 4:38 AM IST (Updated: 16 Nov 2017 4:38 AM IST)
t-max-icont-min-icon

மழையால் துண்டிக்கப்பட்ட ஒரத்தூர்–நீலமங்கலம் சாலையை போக்குவரத்து பயன்பாட்டுக்கு ஏற்றவாறு சீரமைத்தனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக ஒரத்தூர்–நீலமங்கலம் வழியாக கூடுவாஞ்சேரி செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் ஒரத்தூர், நீலமங்கலம், கூடுவாஞ்சேரி செல்லும் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதையடுத்து ஒரத்தூர் முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் என்.டி.சுந்தர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த செலவில் மழையால் துண்டிக்கப்பட்ட ஒரத்தூர்–நீலமங்கலம் சாலையில் மணல் மூட்டைகளை அடுக்கி, மண், மற்றும் ஜல்லி கற்களை போட்டு பொக்லைன் எந்திரம் மூலம் சாலையை போக்குவரத்து பயன்பாட்டுக்கு ஏற்றவாறு சீரமைத்தார். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் பெரும் நிம்மதி அடைந்தனர்.



Related Tags :
Next Story