‘பா.ஜனதாவில் சேர ரூ.5 கோடி பேரம்’ சிவசேனா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
பா.ஜனதாவில் சேருமாறு தன்னிடம் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் ரூ.5 கோடி பேரம் பேசியதாக சிவசேனா எம்.எல்.ஏ. ஹர்ஷவர்தன் ஜாதவ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவுரங்காபாத்,
கன்னடு தொகுதியில் காணப்படும் மோசமான சாலை குறித்து பொதுப்பணித்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீலிடம் சமீபத்தில் முறையிட்டேன். அப்போது, அவர் சிவசேனா சார்பில் நான் வகிக்கும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாரதீய ஜனதா டிக்கெட்டில் மீண்டும் தேர்தலை சந்திக்குமாறு கூறினார்.
சிவசேனாவில் இருந்து விலகி, பா.ஜனதாவில் சேருவதற்காக ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை தருவதாக பேரம் பேசினார். சிவசேனாவின் பலத்தை குறைக்க பா.ஜனதா மூத்த தலைவர்கள், சிவசேனா எம்.எல்.ஏ.க்களை கவருகிறார்கள். அவர்களிடம் யாரும் இரையாகி விட மாட்டோம்.இவ்வாறு ஹர்ஷவர்தன் ஜாதவ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
Related Tags :
Next Story