மண்ணுக்குள் விவசாயம்


மண்ணுக்குள் விவசாயம்
x
தினத்தந்தி 17 Nov 2017 5:15 AM IST (Updated: 16 Nov 2017 12:58 PM IST)
t-max-icont-min-icon

தற்போது செயற்கையான எல்.இ.டி. விளக்கு வெளிச்சத்தை பயன்படுத்தி சிறிய வகை செடிகள் மற்றும் தானியங்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

லகின் முதல் நிலத்தடி விவசாயப்பண்ணை லண்டனில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சாலைக்கு கீழே 120 அடியில் அமைந்துள்ள இந்தப் பண்ணை, இரண்டாம் உலகப்போரின் போது வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முகாம்களாக இருந்துள்ளது. தற்போது செயற்கையான எல்.இ.டி. விளக்கு வெளிச்சத்தை பயன்படுத்தி சிறிய வகை செடிகள் மற்றும் தானியங்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. நீரியல் வளர்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இச்செடிகள் வளர்க்கப்படுவதால் மண்ணுக்கு வேலை கிடையாது. விதைகள் முளைத்து அறுவடைக்கு தயாராக, முப்பது நாட்கள் எடுத்துக் கொள்கிறது. அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் லண்டனில் உள்ள உள்ளூர் உணவகங்கள் மற்றும் சந்தைகளிலேயே விற்கப்படுகின்றன. உலகளவில் மக்கள் தொகை அதிகரிக்கும்போது, இது போன்ற விவசாயப் பண்ணைகள் பல நகரங்களில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story