20–ந் தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்
நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தென்காசி,
நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 20–ந் தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருகிறார். அவருக்கு கரிவலம்வந்தநல்லூரில் காலை 9 மணிக்கு நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் சங்கரன்கோவிலில் முன்னாள் எம்.பி. தங்கவேலு இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொள்கிறார். மதியம் 12 மணிக்கு சுரண்டையில் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். 1 மணிக்கு குற்றாலத்தில் ஓய்வெடுக்கிறார். மாலை 6 மணிக்கு பாவூர்சத்திரம் கே.டி.சி. நகரில் நடைபெறும் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா, முரசொலி பவள விழா மற்றும் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா ஆகிய முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த விழாவில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்று கட்சிகளில் இருந்து 5 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகிறார்கள். நிகழ்ச்சிக்கு முன்னதாக மாலை 4 மணி முதல் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. பொதுக்கூட்டம் இரவு 8.30 மணிக்கு முடிவடைகிறது. அதன் பிறகு மு.க.ஸ்டாலின் அங்கு இருந்து சென்னை செல்கிறார். நெல்லை மாவட்டம் வருகை தரும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக வருகை தந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story