ஓட்டப்பிடாரம் அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை


ஓட்டப்பிடாரம் அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 17 Nov 2017 2:00 AM IST (Updated: 16 Nov 2017 9:09 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தூக்கு போட்டு தற்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஓவுரெட்டியார் (வயது 52). இவருக்கு ருக்குமணி என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவருக்கு பார்வை குறைபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த எப்போதும் வென்றான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவருடைய உடலை கைப்பற்றினர். பின்னர் அவருடைய உடல் எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோன்று, ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு ஆவாரங்காடை சேர்ந்த செந்தூர்பாண்டி மனைவி மாரியம்மாள் (42) என்பவர், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தாராம்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். அவரை உறவினர்கள் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story