முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரையில் இன்று வரவேற்பு ஏற்பாடுகள்


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரையில் இன்று வரவேற்பு ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 17 Nov 2017 3:45 AM IST (Updated: 17 Nov 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

மதுரை வரும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் உதயகுமார், ராஜன்செல்லப்பா தலைமையில் இன்று வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மதுரை,

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நாளை(சனிக் கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மதுரை வருகிறார்.

அவருக்கு பெருங்குடி பகுதியில் அமைச்சர் உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பெருங்குடி வரும் முதல்-அமைச்சரை பெண்கள் ஆரத்தி எடுத்தும், ஒயிலாட்டம், தேவராட்டம், பொய்கால் குதிரை போன்ற கிராமிய நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தேவர் சிலைக்கு மாலை

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். வழிநெடுக அவருக்கு பெண்கள் உள்பட ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளிக்கின்றனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், நீதிபதி, பெரியபுள்ளான், மாணிக்கம், சரவணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள். 

Next Story