தமிழக அரசின் செயல்பாடுகளை கவர்னர் ஆய்வு செய்வதை தவறாக கருத கூடாது அமைச்சர் பேட்டி
தமிழக அரசின் செயல்பாடுகளை கவர்னர் ஆய்வு செய்வதை தவறாக கருத கூடாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இதனை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீனாட்சி அம்மன் கோவில் சார்பாக ரூ.38 லட்சம் செலவில் 8 கடைகள் இங்கு கட்டப்பட்டு உள்ளன. இந்த கடை வாடகை மூலம் கோவிலுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கூடுதல் வருவாய் கிடைக்கும். எதிர்க்கட்சிகள் எது வேண்டுமென்றாலும் பேசுவார்கள். எதிர்க்கட்சிகள் என்றால், ஆளுங்கட்சியை எதிர்த்து பேசுவது தான். அதனால் தான் அவர்களுக்கு எதிர்க்கட்சி என்று பெயர். ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் தேவைகளை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் மற்றும் நிதி முறையாக மக்களை சென்றடைகிறதா என்று துறைவாரியாக அமைச்சர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
இன்றைக்கு கவர்னர் தமிழக திட்டங்களை ஆய்வு செய்ததை பெரிய விஷயமாக பார்க்கிறீர்கள். அரசின் திட்டங்கள் தணிக்கைக்கு உட்பட்டவை. யார் வந்து பார்த்தாலும் இந்த அரசு தெளிவாக இருக்கிறது. மிக சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறோம். அதனால் யார் வந்து பார்த்தாலும் பாராட்டத்தான் செய்வார்கள். கவர்னரின் ஆய்வை ஒரு விமர்சனமாக எடுத்து கொள்ள கூடாது. ஆரோக்கியமானதாக எடுத்து கொள்ள வேண்டும்.
தற்போது கவர்னராக இருப்பவர், எம்.பி.யாக இருந்தவர். மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டவர். அந்த அடிப்படையில் அவர் அரசின் திட்டங்களை ஆய்வு செய்கிறார். இது நல்லது தானே. இன்னும் நமக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசுக்கு கவர்னர் எடுத்து சொல்லி பெற்று தருவார். இதனை நல்லதாக எடுத்து கொள்ள வேண்டும். தவறாக கருத கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து மடீட்சியா அரங்கில் நேற்று மாலை நடந்த 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் 1,083 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டுறவு இயக்க வரலாற்றில் தமிழ்நாடு, இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 1904-ம் ஆண்டில், திருவள்ளூர் மாவட்டம் திரூர் கிராமத்தில் விவசாயக் கூட்டுறவு சங்கமும், நகர்புற மக்களின் கடன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காஞ்சீபுரத்தில் நகர கூட்டுறவு வங்கியும், நுகர்வோர் பயன்பெற திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கமும் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த சங்கங்கள் தற்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது.
தேசிய மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளித்து வருகின்றன. வேளாண் பணிகளுக்காக ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் வேளாண் சேவை மையங்கள் மூலம் உழவு எந்திரம், மினி டிராக்டர் போன்ற வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன. மேலும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை, பயிர் கடன் முதலியன கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கலெக்டர் வீரராகவராவ், கோபாலகிருஷ்ணன் எம்.பி., ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர், மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் துரைபாண்டியன், மதுரை மண்டல இணைப்பதிவாளர் சந்திரசேகரன், மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story