சமைக்க தெரியாததால் புதுப்பெண்ணை எரித்து கொல்ல முயற்சி கணவர் கைது


சமைக்க தெரியாததால் புதுப்பெண்ணை எரித்து கொல்ல முயற்சி கணவர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2017 3:45 AM IST (Updated: 17 Nov 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் சமைக்க தெரியாததால் புதுப்பெண்ணை எரித்த கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசல் பூமால் ராவுத்தர் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 28). கொத்தனார். இவருடைய மனைவி சுமதி ( 19). இவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. மேலும் சுமதிக்கு சமைக்க தெரியாது என கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று லட்சுமணன் தனது மனைவியிடம் சமைக்குமாறு கூறி உள்ளார்.

உயிரோடு எரிப்பு

அதற்கு அவர் தெரியாது என கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து அவர் மீது ஊற்றி தீயை பற்ற வைத்தார். இதில் உடலில் தீ பற்றிய நிலையில் சுமதி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். மேலும் அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்குப்போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து லட்சுமணனை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story