கும்பகோணம், திருவையாறில் ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்
கும்பகோணம், திருவையாறில் ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
கும்பகோணம்,
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30-ந் தேதி காவிரி ஆற்றில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது வழக்கம். மயிலாடுதுறை துலா கட்டம், கும்பகோணம் பகவத் படித்துறை, ராமேசுவரம் தீர்த்த கட்டம் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் இத்தகைய கடைமுழுக்கு தீர்த்தவாரி புகழ்பெற்றது. ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரி நேற்று காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் இருந்து விநாயகர், சுப்ரமணியர், பெரியநாயகி அம்மன், நாகேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.
அபிஷேகம்
பின்னர் கும்பகோணம் காவிரி ஆற்றின் பகவத் படித்துறைக்கு பகல் 12 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். தொடர்ந்து அஸ்திர தேவருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
திருவையாறு
இதே போல தஞ்சை மாவட்டம் திருவையாறில் கடைமுழுக்கு தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர், தர்மசம்வர்த்தினி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் புஷ்யமண்டப படித்துறைக்கு எழுந்தருளினார். இதை தொடர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story