தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் விபரீத முடிவு


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 17 Nov 2017 3:45 AM IST (Updated: 17 Nov 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னிமலை,

சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் எல்லைமேட்டை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 60). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி கற்பகம் (55). மூர்த்திக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

அதேபோல் சம்பவத்தன்று மூர்த்தி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கற்பகம் அவரை, ‘ஏன் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறீர்கள்? என்று திட்டினார் இதனால் மனம் உடைந்து காணப்பட்ட மூர்த்தி வீட்டைவிட்டு வெளியே சென்றார்.

தற்கொலை

இந்த நிலையில் கற்பகம் சிறிது நேரம் கழித்து வெளியே சென்றார். அப்போது வீடு அருகே உள்ள ஒரு முட்புதரில் மூர்த்தி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி மூர்த்தி நேற்று காலை இறந்தார். 

Next Story