மாநிலத்தில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை எடியூரப்பா குற்றச்சாட்டு
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்று எடியூரப்பா குற்றம்சாட்டினார்.
மங்களூரு,
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜனதா சார்பில் மாற்றத்திற்கான பயணம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை எடியூரப்பா தொடங்கினார். இந்த பயணம் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்றது. இந்த நிலையில் நேற்று இந்த மாற்றத்திற்கான பயணம் உத்தர கன்னடா மாவட்டம் முண்டுகோடு பகுதிக்கு வந்தது.
முண்டுகோடுவுக்கு வந்த இந்த பயணத்திற்கு தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களை பார்த்து எடியூரப்பா உற்சாகமாக கையசைத்தார். இதையடுத்து எடியூரப்பா பேசியதாவது:–சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. அபிவிருத்தி பணிகளில் இந்த அரசு தோல்வி கண்டு உள்ளது. மத்தியில் பிரதமர் மோடி சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார். அவர் கர்நாடக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். ஆனால் அந்த நலத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்த சித்தராமையா தவறி விட்டார்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்கும். அப்போது மத்திய அரசு அறிமுகப்படுத்திய நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.