விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு


விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு
x
தினத்தந்தி 17 Nov 2017 5:14 AM IST (Updated: 17 Nov 2017 5:14 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் வேளாண்மைதுறையும், வருவாய்துறையும் இணைந்து பிரதமரின் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளை சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் விவசாயிகள் என்ன பயிரிட்டு வருகின்றனர் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு அடங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தாசில்தார் பத்மநாபன் தலைமை தாங்கினார். குடியாத்தம் வேளாண்மை துணை இயக்குனர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் உதவி வேளாண்மை இயக்குனர்கள் ஜெயக்குமார், விஸ்வநாதன், அலுவலர்கள் சத்யலட்சுமி, உமாசங்கர் மற்றும் வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.


Next Story