காதலுக்கு விலை
வியட்னாமில் இருக்கும் ‘ஓல்ட் ப்ளேம்ஸ்’ என்ற சந்தை, காதல் தோல்விகளுக்கு பிரபலமானது.
‘காதல் தோல்விக்கும், சந்தைக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்டால், ‘நிறைய சம்பந்தம் இருக்கிறது’ என்று சிரிக்கிறார்கள், அங்கு சந்தை விரித்திருக்கும் கடைக்காரர்கள்.
‘காதலிக்கும் போது காதல் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், ஆடைகள், மெழுகுவர்த்தி, வேலெட் என நிறைய பொருட்களைப் பரிசளிக்கிறார்கள். அதுவே காதல் தோல்வியாக மாறும் பட்சத்தில், பரிசளித்த பொருட்களை எல்லாம் திரும்பக் கொடுத்துவிடுகிறார்கள். அப்படி காதலர்களால் திரும்பக் கொடுக்கப்படும் நினைவுப் பொருட்களை, நல்ல விலைக்கு வாங்கி, அதை வேறு சிலருக்கு விற்பது தான் எங்களுடைய வேலை. ஏற்கனவே காதல் தோல்வியால் நொந்து கொண்டிருப்பவர்களுக்கு, எங்களால் முடிந்த உதவி களை செய்கிறோம்’ என்று கூறும் கடைக்காரர்கள், காதலித்த ஆண்டுகளை கணக்கில் வைத்தும் விலை நிர்ணயம் செய்கிறார்கள். 2 ஆண்டு கால காதல் பரிசுகளுக்கு ஒரு விலையும், 10 ஆண்டு கால காதல் பரிசுக்கு ஒரு விலையும் கொடுத்து அசத்துகிறார்கள்.
Related Tags :
Next Story