ஒரே கல்லில் 40 மாங்காய்!


ஒரே கல்லில் 40 மாங்காய்!
x
தினத்தந்தி 17 Nov 2017 12:32 PM IST (Updated: 17 Nov 2017 12:32 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவைச் சேர்ந்த சாம் கான் அகேன், ஒரே கல்லில் 40 மாங்காய் அடித்திருக்கிறார்.

தாவரவியல் பேராசிரியரான சாம் கான் அகேன், ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை விளைவித்து அசத்தியிருக்கிறார். 

அமெரிக்காவின் சைரகஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சாம் கான், தனது பண்ணை தோட்டத்தில் விதவிதமான தாவரங்களை வளர்த்து வருகிறார். அதன் தன்மைகளை அலசி ஆராய்ந்ததோடு, அவை அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே மரமாகவும் மாற்றியிருக்கிறார். ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை காய்க்கச் செய்ய 8 வருடங்கள் தேவைப்பட்டதாம்.

‘செரிஸ், பிளம்ஸ், பெரிஸ் என 40 வகையான பழ வகைகளை ஒருங்கிணைப்பது சாதாரண வி‌ஷயம் இல்லை. ஒரு சின்ன தவறு ஏற்பட்டாலும், மொத்த உழைப்பும் வீணாகிவிடும். கடந்த ஏழு வருடங்களில் ஏகப்பட்ட தவறுகளை செய்துவிட்டேன். அந்த தவறுகளில் கற்றுக்கொண்ட பாடம் தான், இந்த அதிசய மரமாக வளர்ந்து நிற்கிறது’ என்று சந்தோ‌ஷப்படுகிறார், சாம் கான்.

Next Story