பஸ்சுக்குள் புகுந்து வங்கி ஊழியர் உள்பட 2 பேர் மீது தாக்குதல் 10 பேருக்கு வலைவீச்சு


பஸ்சுக்குள் புகுந்து வங்கி ஊழியர் உள்பட 2 பேர் மீது தாக்குதல் 10 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Nov 2017 2:00 AM IST (Updated: 17 Nov 2017 8:14 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி அருகே பஸ்சுக்குள் புகுந்து தனியார் வங்கி ஒப்பந்த ஊழியர் உள்பட 2 பேரை தாக்கி காயப்படுத்திய 10 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆறுமுகநேரி,

ஆறுமுகநேரி அருகே பஸ்சுக்குள் புகுந்து தனியார் வங்கி ஒப்பந்த ஊழியர் உள்பட 2 பேரை தாக்கி காயப்படுத்திய 10 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

தனியார் வங்கி ஒப்பந்த ஊழியர்

திருச்செந்தூர் கரம்பவிளை பெஞ்சமின் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விக்னேசுவரன் (வயது 21). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் வங்கியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தினமும் காலையில் திருச்செந்தூரில் இருந்து தனியார் பஸ்சில் தூத்துக்குடிக்கு வேலைக்கு செல்வது வழக்கம். பஸ்சில் சென்றபோது விக்னேசுவரனுக்கும், ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பஸ்சுக்குள் புகுந்து தாக்குதல்

இந்த நிலையில் நேற்று காலையில் விக்னேசுவரன் வழக்கம்போல் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு தனியார் பஸ்சில் வேலைக்கு சென்றார். அப்போது ஆறுமுகநேரியை அடுத்த சாகுபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, தலைவன்வடலியைச் சேர்ந்த காளி, ஜேசு, சதீஷ், கணேசன் உள்ளிட்ட 10 பேர் பஸ்சில் ஏறி, விக்னேசுவரனை தாக்கினர். இதனை தடுக்க முயன்ற விக்னேசுவரனின் நண்பரான கலைச்செல்வனையும் (23) தாக்கினர்.

10 பேருக்கு போலீசார் வலைவீச்சு

காயம் அடைந்த விக்னேசுவரன், கலைச்செல்வன் ஆகிய 2 பேரும் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான காளி, ஜேசு உள்ளிட்ட 10 பேரை தேடி வருகின்றனர்.

Next Story