மத்தியஅரசை விமர்சித்து சுவரொட்டிகள்: 3 அமைப்புகள் மீது வழக்குப்பதிவு


மத்தியஅரசை விமர்சித்து சுவரொட்டிகள்: 3 அமைப்புகள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 Nov 2017 3:00 AM IST (Updated: 18 Nov 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனை வளாக சுவர்களில் மத்தியஅரசை விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் சுவரொட்டிகளை ஒட்டிய மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞரணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய 3 அமைப்புகள் மீது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story