அஞ்சலி தெண்டுல்கரின் 2 வீடுகள் உள்பட 1,128 வீடுகளுக்கு சட்டவிரோத மின்இணைப்பு?
பால்கர் மாவட்டம் விராரில், விவா கிங்ஸ்டன் கிரோன் என்ற பெயரில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
மும்பை,
பால்கர் மாவட்டம் விராரில், விவா கிங்ஸ்டன் கிரோன் என்ற பெயரில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த குடியிருப்புகளில் மொத்தம் 1,128 வீடுகள் உள்ளன. இதில் 2 வீடுகள் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மனைவி அஞ்சலி பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அங்குள்ள துணை மின் நிலையத்தில் இருந்து சட்டவிரோதமாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த சிவசேனாவினர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மாநில மின்வினியோக நிறுவனம் விசாரணையை தொடங்கி உள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் மித்தல் ஷா மறுத்து உள்ளார்.
Related Tags :
Next Story