5–ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு பால்தாக்கரே நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் 5–ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
மும்பை,
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது மனைவி ரேஷ்மி தாக்கரே, மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோருடன் வந்து தனது தந்தையின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர், சிவசேனா மூத்த தலைவர் மனோகர் ஜோஷி, சுபாஷ் தேசாய், திவாகர் ராவ்தே உள்ளிட்ட மாநில மந்திரிகள், சஞ்சய் ராவுத் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தாராவி தாலுகா சிவசேனா துணைத்தலைவர் பி.எஸ்.கே. முத்துராமலிங்கம், கவுன்சிலர் மாரியம்மாள் உள்ளிட்டவர்களும் பால் தாக்கரேயின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story