தரைக்கடைகள் அகற்றப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டம்


தரைக்கடைகள் அகற்றப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2017 4:15 AM IST (Updated: 19 Nov 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

தரைக்கடைகள் அகற்றப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் திடீர் போராட்டம்

திருச்சி,

திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் உள்ளன. இந்த கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் இந்த கடைகளை அப்புறப்படுத்தினார்கள். அவற்றில் இருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் சிலர் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கேட்டு கொண்டனர். இது குறித்து எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்து விட்டு பொருட்களை பெற்று செல்லும்படி அதிகாரிகள் கூறினர். அதன்படி எழுதி கொடுத்தபின் பொருட்களை பெற்று விட்டு அங்கிருந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story