ஆண்டுக்கு ரூ.250 கோடி வர்த்தகம்: கொசுவலை மூலப்பொருட்களுக்கு சரக்கு, சேவை வரி குறைக்கப்படுமா?
கரூரில் கொசுவலை மூலம் ஆண்டுக்கு ரூ.250 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. இதற்கான மூலப்பொருட்களுக்கு சரக்கு, சேவை வரி குறைக்கப்படுமா? என உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கரூர்,
கரூரில் ஜவுளி, பஸ் பாடி தொழிலுக்கு அடுத்தபடியாக கொசுவலை உற்பத்தி இருக்கிறது. கரூரில் 2 வகையான கொசுவலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ரசாயனம் கலந்த கொசுவலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரசாயனம் கலக்காத கொசுவலைகள் உள்நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
கரூரில் ரசாயனம் கலக்காத கொசுவலை தயாரிப்பில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை கொசுவலை உற்பத்தி வர்த்தகம் நடைபெறுகிறது.
கொசுவலை தயாரிக்க பாலி எத்திலீன் என்ற மூலப்பொருளில் இருந்து நூல் எடுத்து துணியாக மாற்றி தயாரிக்கப்படுகிறது. துணியில் இருந்து அளவுக்கு தகுந்தாற் போல் கொசுவலை வெட்டப்படும். ரசாயனம் கலக்காத கொசுவலைக்கு நாடு முழுவதும் வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் கொசுவலை உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு 18 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டது.
இதனால் கொசுவலை தயாரிப்பு தொழில் பாதிப்படைந்து வருவதாக கொசுவலை உற்பத்தியாளர்கள் கூறினர். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கும் போது பல்வேறு பொருட்களுக்கு சரக்கு, சேவை வரி குறைக்கப்பட்டு அறிவிக்கப்படுகின்றன. அதுபோல கொசுவலை மூலப்பொருட்களுக்கும் வரியை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கொசுவலை துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஷ்குமார் கூறுகையில், “சரக்கு, சேவை வரியால் கொசுவலை உற்பத்தி தற்போது குறைந்துள்ளது. மூலப்பொருட்களுக்கு 18 சதவீதம் வரி அதிகமாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளது. எனவே சரக்கு, சேவை வரியை 5 சதவீதமாக குறைத்தால் உற்பத்தியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

Related Tags :
Next Story