செந்துறையில் போலீசாரை கண்டித்து கிராம நிர்வாக ஊழியர்கள் சாலை மறியல்


செந்துறையில் போலீசாரை கண்டித்து கிராம நிர்வாக ஊழியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Nov 2017 3:45 AM IST (Updated: 19 Nov 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

செந்துறையில் போலீசாரை கண்டித்து கிராம நிர்வாக ஊழியர்கள் சாலை மறியல்

செந்துறை,

அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி செந்துறை, இரும்புலிக்குறிச்சி போலீசார் செந்துறை பகுதியில் தீவிர வாகன சோதனை செய்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். மேலும் அரசு ஊழியர்கள் என்றாலும், விதிமுறைகளை மீறிய வாகனங்களையும் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை போலீசார் வாகன சோதனையின் போது ரெவின்யூ என்று ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பிடித்து போலீசார் வழக்கு போடுகிறார்கள் என்று கூறி கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் செந்துறை தாலுகா அலுவலகம் முன்பு செந்துறை-உடையார்பாளையம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை தாசில்தார் உமாசங்கரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம நிர்வாக ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றார். இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த திடீர் சாலை மறியலால் செந்துறை-உடையார்பாளையம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story