போட்டி பாராளுமன்ற கூட்டத்திற்கு விவசாய சங்கத்தினர் டெல்லி புறப்பட்டனர்

தாமரைக்குளம்,
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு இந்தியா முழுவதும் உள்ள 180-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து தலைநகர் டெல்லியில் வருகிற 20, 21, 22-ந்தேதிகளில் போட்டி பாராளுமன்ற கூட்டம் நடத்த உள்ளனர். தேசிய அளவில் விவசாய கடன் தள்ளுபடி, விவசாய உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படியான கொள்முதல் விலை, உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதல் விலை என்ற தேசிய விவசாய கமிஷனின் பரிந்துரையை சட்டமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள அரியலூர் மாவட்டத்தில் இருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டனர். இவர்களை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு அரியலூர் ரெயில் நிலையத்தில் இறங்கி அழைத்து சென்றார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க திருமானூர் ஒன்றிய தலைவர் செந்தில் தலைமையில், வேலுமணி உள்ளிட்டோர் புறப்பட்டு சென்றனர். முன்னதாக ரெயில் நிலையம் முன்பு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story