ரெயில்வே போலீசாருக்கான சீருடை மாறுகிறது கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்
ரெயில்வே போலீசாருக்கான சீருடை மாற்றப்படுகிறது என்று கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
திருச்சி,
திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று ரெயில்வே போலீசாருக்கான கண் சிகிச்சை முகாம் நடந்தது. இந்த முகாமை ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில்களில் செல்லும்போது பயணிகள் ஏதேனும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் எந்த ரெயில்வே போலீஸ் நிலையத்தில் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக சென்னையில் ரெயிலில் பயணிக்கும் போது, பணம், உடைமைகள் திருட்டுபோனால் திருச்சியில் புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார்களை போலீசார் எடுக்கவில்லை என்றால் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், சென்னையில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலகம், ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
ரெயில்வே போலீஸ் நிலையங்களில் மக்கள் புகார் அளித்தபிறகு, ஏதேனும் அவசர வேலை இருந்தால் உடனே கிளம்பி விடலாம். எப்.ஐ.ஆர். உங்கள் வீடு தேடி வரும். தற்போது திருச்சி, மதுரை ரெயில்வே கோட்டங்களில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. வடக்கு மண்டலத்தில் வேலூர், சென்னை கோட்டங்களில் குற்ற சம்பவங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவரிடம், “ரெயில்வே போலீசாருக்கான சீருடை மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறதே?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நிறைய மாற்றங்கள் உண்டு. அதுகுறித்து விரைவில் உங்களுக்கு தகவல் வரும்” என்றார்.
அப்போது ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா உடன் இருந்தார்.

Related Tags :
Next Story