கரும்பு தோட்டத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பதுக்கல்
கீழ்பென்னாத்தூரில் கரும்பு தோட்டத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
திருவண்ணாமலை,
கீழ்பென்னாத்தூரை அடுத்த கீக்களூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 46), கட்டிட மேஸ்திரி. இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று உள்ளார். இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் எரிசாராயம் புதைத்து வைத்திருப்பதாக கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
எரிசாராயம் பறிமுதல்
அப்போது 13 கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு போலீசார் கீழ்பென்னாத்தூர் வந்து பறிமுதல் செய்யப்பட்ட எரிசாரயத்தை கைப்பற்றினர்.
மேலும் ஏழுமலையின் தோட்டத்தில் எரிசாராய கேன்களை பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story